ஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

Jun 16, 2019 04:21 PM 69

எஸ்.எஸ் கோட்டை ஸ்ரீபடைத்தலைவி அம்மன் புறவி எடுப்பு விழாவில், இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்றாம் ஆண்டு ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ் கோட்டையில், ஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் புறவி எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் சாலையில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 23 பெரிய மாடுகள் குழுவாகவும், 31 சின்னமாடுகள் குழுவாகவும் பந்தயத்தில் பங்கேற்றன.

இதில் எட்டு மைல் தூரத்தை எட்டி பெரிய மாடுகள் குழுவில், முதல் பரிசாக திருச்சியை சேர்ந்த செந்தில் பிரசாத்தின் மாடு, 22 ஆயிரத்து 3 ரூபாய் பரிசினை தட்டிச் சென்றது. சின்ன மாடுகள் பந்தயத்தில் ஆறு மைல் தூரத்தை கடந்து, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நீத்திஷின் மாடு, 15 ஆயிரத்து 3 ரூபாய் பரிசை வென்றது.

Comment

Successfully posted