ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ.க. அரசை கவிழ்காதது ஏன்? - ஆர்.எஸ்.எஸ்.க்கு சிவசேனா கேள்வி

Nov 03, 2018 12:55 PM 492

அண்மையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பையா ஜி ஜோசி, ராமர் கோவில் கட்ட , தேவைப்பட்டால் போராட்டம் நடத்தவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தயங்காது என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்ரே, ஆர்.எஸ்.எஸ். ஏன் இன்னும் பா.ஜ.க. அரசை கவிழ்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். நவம்பர் 25-ம் தேதி தான் அயோத்திக்கு செல்ல உள்ளதாக அறிவித்த பிறகே இந்த விவகாரம் குறித்து பலரும் பேசுவதாக உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உழைப்பால் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., அந்த அமைப்பின் கொள்கைகளை கிடப்பில் போட்டுவிட்டதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.

Comment

Successfully posted