புதிய கல்வி கொள்கையை தமிழக மக்கள் மீது திணிக்கக் கூடாது- ராமதாஸ்

Jun 01, 2019 06:19 PM 291

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக மக்கள் மீது திணிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசிய கல்வி கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதும், தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதும் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும், மும்மொழி கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது என்றும், வரைவு தேசிய கல்வி கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted