இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி

Jun 05, 2019 07:37 AM 100

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினருக்கும் நீதியை பெற்றுத்தர மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சியை பாராட்டி இஸ்லாமிய மதத்தலைவர்கள் ஆசி வழங்கினர். நிகழ்ச்சியில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அமைச்சர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சகோதரத்துவத்துடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் இலங்கையில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted