ராமநாதபுர மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

Jul 25, 2020 05:37 PM 586

ராமநாதபுரத்தில் எஸ்.பி. யின் பிரத்யேக புகார் அலைபேசியை தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை , மேற்கு மும்பையை சேர்ந்த லோகநாதன் என்பவர், ஏர்வாடி தர்ஹா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை கைது செய்த காவல்துறையினர், 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted