பெண்களின் ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் பரப்பி காசு பறிக்கும் கும்பலால் ராமநாதபுரம் பெண்கள் அதிர்ச்சி!

Jul 06, 2020 09:40 PM 1338

பெண்களின் ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் பரப்பி காசு பறிக்கும் கும்பலால் ராமநாதபுரம் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துணிச்சலுடன் பெண் ஒருவர் கொடுத்த புகாரால், இத்தனை நாட்களாக பாலியல் வேட்டை நடத்தி வந்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நெஞ்சை பதறச் செய்யும் இந்த பாலியல் அட்டூழியம் குறித்த தகவல்கள் இதோ. யார் இந்த பெண்.. எதற்காக இப்படி கதறுகிறார்.. 17 வயது மகன், 15 வயது மகளின் தாயான இவர் ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்தவர். ஒருநாள் இவரது செல்போனுக்கு இவரது ஆபாச படங்கள் அடுத்தடுத்தது வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தார். புகாரில் தம்மை 2-வது திருமணம் செய்து கொள்வதாக சகாபுதீன் என்பவர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் அவருடன் தனிமையில் இனிமையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது சகாபுதீனும், அவரது நண்பர்களும் சேர்ந்து தமக்குத் தெரியாமல் ஆபாச படங்கள் எடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். சமயத்தில் யாருக்கும் பகிரப் போவதில்லை என்று கூறி நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறி கண்கலங்குகிறார் அந்த பெண். இதையடுத்து சகாபுதீன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு பாலியல் வேட்டை கும்பல் ஏர்வாடியில் இயங்கி கொண்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. பெண்ணை ஏமாற்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஏர்வாடியில் செயல்பட்டு வரும் செல்போன் பாத்நெட் என்ற செல்போன் ரீசார்ஜ் கடையின் உரிமையாளர்களான பாதுஷா, ஹாஜி ஆகியோருக்கு சகாபுதீன் அனுப்பி உள்ளார். அவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு அந்த படங்களை அனுப்பிக் காசு பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் பாதுஷா, ஹாஜி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏர்வாடி பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களின் செல்போனில் ANY DESK என்ற செயலியை அவர்களுக்கு தெரியாமல் பதிவேற்றி அதன்மூலம் அவர்களின் அந்தரங்க செயல்களை படம்பிடித்து வந்துள்ளனர். கணவனை இழந்த பெண்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளை மட்டுமே இவர்கள் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் சிக்கிய பெண்கள் குடும்ப கவுரவம் கருதி போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மாவட்ட எஸ்.பி அருண்குமார் அறிவித்துள்ள பிரத்யேக செல்போன் எண் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கும் துணிச்சலையும், தைரியத்தையும் அளித்துள்ளது. 

Comment

Successfully posted