கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Feb 12, 2019 12:14 PM 168

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனர்வர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து, 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள், படகை வேகமாக இயக்க முயன்றபோது படகு ஒன்று காற்றின் வேகத்தால் சேதமடைந்தது. அதில் இருந்த 4 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், சக மீனவர்களின் உதவியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted