பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்

Jun 25, 2019 11:32 AM 201

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடிகள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். மோடி சமுதாயத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்க ராகுலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ராகுல் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Comment

Successfully posted