ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல்

Dec 18, 2018 06:00 PM 379

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 10 நாட்கள் பரோல் வழங்க தயார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தனது மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உரியமுறையில் விண்ணப்பித்தால் ரவிச்சந்திரனுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை பரோல் வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார். தமிழக அரசின் பதிலை ஏற்ற நீதிமன்றம், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

 

 

Comment

Successfully posted