ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ரெட் அலர்ட்

Jun 18, 2019 02:24 PM 134

நிபா வைரஸ் கேரளாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஒட்டன் சத்திரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளநிலையில், தமிழகத்திற்கு பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எல்லையில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கேரளாவில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் சுகாதாரத் துறை மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மார்க்கெட் பகுதியில் தேங்கும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதோடு, கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகளை மருத்துவ சோதனை செய்த பின்னரே ஒட்டன்சத்திரத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என மார்க்கெட் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comment

Successfully posted