டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

May 25, 2020 09:24 AM 938

வடமாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 கோடை காலத்தின் உச்சமாக வடமாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் நாட்களில் அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் அசாம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பொதுமக்கள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே வரக்கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Comment

Successfully posted