சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு

May 09, 2021 09:19 PM 495

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி சென்னை புறநகர் சேவை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 480 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வார நாட்களில் இனி 288 ரயில்கள் மட்டுமே இயங்கும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று அத்தியாவசிய பணியாளர்கள் செல்ல இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted