வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை

Jun 13, 2019 10:40 AM 49

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், அருகில் உள்ள இடைத்தரகர்கள் கடைகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு அசோகன் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மீதான விசாரணை நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில் அசோகன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதி ஓய்வு பெற்ற உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அசோகனை வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த இடைத்தரகர்கள் கடைகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Comment

Successfully posted