பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு எழுதலாம்- ரயில்வே வாரியம்

Sep 10, 2019 08:12 AM 66

ரயில்வே துறையில் உதவியாளர் பணிகளில் உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு செல்ல எழுதப்படும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்ற அறிவிப்பு ரயில்வே தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ரயில்வே துறையில் உதவியாளர் கேங் மேன் உள்ளிட்ட நான்காம் தர பணியில் இருப்பவர்கள் உயர் பதவிகளுக்கு செல்ல எழுதப்படும் தேர்வை இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும், ரயில்வே தொழில் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பதவி உயர்வுக்காக எழுதப்படும் தேர்வை அந்தந்த மாநில மொழிகளிலையே எழுதிக் கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted