குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிகள்

Jan 20, 2020 10:36 AM 122

குடியரசு தின விழாவினை முன்னிட்டு சென்னை மெரினாவில் காவலரின் ஒத்திகை அணிவகுப்பு மற்றும் மாணவர்களின் ஒத்திகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் தமிழக மற்றும் புதுவை கடலோர காவல்துறை, தேசிய மாணவர் படை, விமானப்படை, மகளிர் காவல்துறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் ஒத்திகை அணிவகுப்பு  நடத்தப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் வீரதீர சாகச ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி, இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் குடியரசு தின நாளான 26 ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிப்படாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted