சூப்பர் டீலக்ஸ் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Feb 21, 2019 06:17 PM 401

ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து இயக்குநர் தியாகராஜா குமாரராஜா அடுத்ததாக "சூப்பர் டீலக்ஸ்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் எனப் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற "திருநங்கை " கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் விநியோக உரிமையை " ஒய் நாட் எக்ஸ் '' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் "சூப்பர் டீலக்ஸ்" படம் மார்ச் 29ல் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted