11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள்!

May 22, 2020 03:50 PM 680

திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட 11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், முடித்திருத்துவோர், இசை கலைஞர்கள், நடைப்பாதை வியாபாரிகள் நலச்சங்கம் உள்ளிட்ட 11 நலச்சங்கத்தை சேர்ந்த ஆயிரம் நபர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Comment

Successfully posted