புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு

Dec 02, 2018 04:56 PM 182

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தின பொதுக்கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று, உறுப்பினர்களுக்கு நியாம்கோஷ் விருதுகளை வழங்கினார். இதில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted