பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு வழக்கு: தேர்தல் அதிகாரியை அணுகும்படிஉத்தரவு

May 16, 2019 07:22 PM 84

பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரிய வழக்கில் தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவின் போது, அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் இந்த சம்பவம் நடந்ததால், பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் வாக்குச்சாவடி அருகே நடைபெற்ற வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை எனவும், மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இது தொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படியும், அவர் மறு தேர்தல் குறித்து முடிவெடுப்பார் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comment

Successfully posted