ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Dec 05, 2019 12:29 PM 395

ரெப்போ வட்டி விகிதம் 5 .15 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 முறை ரிசர்வ் வங்கி குறைத்தநிலையில், இம்முறை மாற்றம் செய்யவில்லை என அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 4 .90 சதவிகிதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted