2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை

Aug 03, 2018 11:15 AM 579

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர், அடுத்தடுத்த நடைபெற்ற பல்வேறு தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று வருகிறது. இதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெறும் முறைகேடே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த 17 அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comment

Successfully posted