உத்தர பிரதேசத்தின் 4 நகரங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை -முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ க்கள் கடிதம்

Nov 11, 2018 10:22 AM 350

உத்தர பிரதேச மாநிலத்தின் 4 நகரங்களின் பெயர்களை மாற்றும் படி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த மாநிலத்தில் உள்ள முகல்சராய், அலகாபாத் மற்றும் பைசாபாத் நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஆக்ரா, முசாபர் நகர், அலிகார் மற்றும் பஸ்தி நகரங்களின் பெயர்களை மாற்றும்படி, அத்தொகுதி பாஜக எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், 'ஆக்ரா' நகருக்கு, 'அக்ராவன்' அல்லது 'அகர்வால்' என பெயர் மாற்ற வேண்டும் என்றும், 'முசாபர்' நகரின் பெயரை, 'லக் ஷமிபூர்' என்றும், 'அலிகார்' பெயரை 'ஹரிநகர்' என்றும்,'பஸ்தி' என்பதை, 'வசிஷ்ட நகர்' என்றும் பெயரை மாற்ற அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Comment

Successfully posted