விருதுநகரில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

Sep 04, 2019 12:59 PM 223

விருதுநகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞரின் உடல் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்ததது. இதையடுத்த உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின் போது சடலமாக மீட்கப்பட்ட உடலானது காணாமல் போன சதீஷ்குமார் என்பதும், அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்துவிட்டு உடலை வீசிச் சென்றதும் கண்டறியப்பட்டது. முன்விரோதம் காரணமாக சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறேதும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related items

Comment

Successfully posted