விஞ்ஞானிகளுடன் சென்ற ஆராய்ச்சிக் கப்பலில் தீ விபத்து

Mar 16, 2019 12:05 PM 88

மங்களூரு அருகே அரபிக்கடல் பகுதியில் விஞ்ஞானிகளுடன் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, சேதமானது.

கர்நாடக மாநிலத்தின் மங்களூரு அருகேயுள்ள, அரபிக் கடல் பகுதியில் ஆராய்ச்சிக் கப்பலில் 16 விஞ்ஞானிகள் மற்றும் 30 கப்பல் பணியாளர்கள் பயணப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நேற்றிரவு ஆராய்ச்சிக்கப்பலில் திடீரென தீப்பற்றியது. இத்தீயை அணைக்கும் பணியில், கப்பற்படையைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ஷீர் ஆகிய கப்பல்கள் பணியில் அமர்த்தப்பட்டன. பின், ஆராய்ச்சிக் கப்பலில் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அக்கப்பல் மங்களூருவில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, நிறுத்தப்பட்டது.

Comment

Successfully posted