மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

Dec 11, 2019 06:40 PM 491

தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனத்தவர்களுக்கும்(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, ஓசூர், சேலம், திருப்பூர், தஞ்சை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அனைத்து பிரிவினரும் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted