பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர்களுடன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆலோசனை

Oct 15, 2019 12:59 PM 110

நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களுடன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, தொடர்ந்து குறைத்து வரும் நிலையில், வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், தொழிற்கடன் ஆகியனவற்றிற்கான வட்டி விகிதங்களை மாற்றம் செய்வது குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Comment

Successfully posted