சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு!

Oct 14, 2018 01:23 PM 549

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 9.50-க்கு செங்கோட்டையை அடையும்.

செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இதேபோன்று, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கொல்லம், நாகர்கோவில், ஆமதாபாத், சந்திரகாசி உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted