ராமச்சந்திர ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மரியாதை

Oct 17, 2018 12:04 AM 489

ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

சி.பா. ஆதித்தனாரின் புதல்வர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 5 வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்திற்கு வந்த அமைச்சர்  பாண்டியராஜன், அங்குள்ள ராமச்சந்திர ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். மறைந்த மாண்புமிகு முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அன்புக்குரியவராக ராமச்சந்திர ஆதித்தனார் திகழ்ந்தாக அவர் கூறினார். தமிழை வளர்க்கும் பணியில், அவரது தந்தை போல் செயல்பட்டு, பத்திரிகை துறையில் பெரிய தாக்கத்தையும் ராமச்சந்திர ஆதித்தனார் ஏற்படுத்தியதாகவும் பாண்டியராஜன் புகழாரம் சூட்டினார்.

Comment

Successfully posted