மக்கள் குறைகளை கேட்டறிந்து எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் பரிசீலனை!

May 22, 2020 05:03 PM 687

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் குறைகளை கேட்டறிந்து எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும், அரசு அதனை பரிசீலிக்க தயாராக உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை முத்துப்பட்டியில் குடிசை பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மதுரை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வரும் 27ம் தேதி வந்து சேரும்படியாக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். முல்லை பெரியாறு அணையின் லோயர் கேம்பிலிருந்து மதுரைக்கு இரும்பு பைப் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தினை கொரோனா பாதிப்பு முடிந்ததும் முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted