நியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - நாராயணசாமி

Dec 08, 2018 04:07 PM 368

பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 14-ம் தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted