ரியா சக்ரபோர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் - 9 நிபந்தனைகள் என்னென்ன?

Oct 07, 2020 06:54 PM 1158

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்திக்கு 9 நிபந்தனைகளை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, போதைப் பொருள் வழக்கில் கடந்த மாதம் 8ஆம் தேதி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று, சாமுவேல் மிரண்டா, தீபேஷ் சாவந்த் ஆகியோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. அதேநேரம், ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்கரவர்த்திக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஜாமின் வழக்கில், நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 9 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில்,

  1. பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
  2. 10 நாட்களுக்கு ஒரு முறை மும்பை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
  3. ஜாமின் தொகையாக ஒரு லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும்
  4. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு எங்கும் செல்லக் கூடாது.
  5. மும்பையைவிட்டு செல்லும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  6. சம்பந்தப்பட்ட சாட்சியங்களை சந்திக்கக் கூடாது.
  7. அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் திங்களன்று விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
  8. வழக்கு தொடர்பான விசாரணையில், தேவைப்படும் பட்சத்தில் அனைத்து தேதிகளிலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
  9. வழக்கின் விசாரணை மற்றும் ஆதாரங்களை அழிக்கக் கூடாது.

என்பன உள்பட 9 நிபந்தனைகள் ரியாவுக்கு விதித்து மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Comment

Successfully posted