ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை- விவசாயிகள் கவலை

Jun 13, 2021 07:56 AM 1232

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கு 174 தூர்வாரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பத்து பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் முழுவதுமாக பயன்படாமல், கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், அனைத்து ஆறுகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியும் என்றும், அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted