லலிதா ஜுவல்லரியில் கொள்ளை : வட மாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

Oct 03, 2019 08:38 AM 276

லலிதா ஜூவல்லரி நகை கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில், வட மாநில இளைஞர்கள் 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் சுவரில் துளைபோட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் நகைகளை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த துணிகர கொள்ளையில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

Comment

Successfully posted