போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Dec 09, 2019 08:32 PM 481

சென்னை போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

போரூரில் உள்ள வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பியோடிய நிலையில், பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இதனையடுத்து குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted