கோவை பட்டத்தரசியம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை

Feb 13, 2019 08:39 PM 423

கோவை மாவட்டத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பாப்பநாயக்கன்பாளையத்தில், இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், நேற்றிரவு மர்ம நபர்கள் புகுந்து, கோவிலின் பூட்டை உடைத்து அங்குள்ள உண்டியல் மற்றும் ஒன்றரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துள்ளனர்.

இதனையடுத்து, கிராம மக்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். கொள்ளயடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்குமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted