WWE-ல் விளையாடப் போகும் ராக்-ன் மகள்....

Feb 12, 2020 01:06 PM 745

WWE குத்துச்சண்டை வீரரும், நடிகருமான ட்வெய்ன் ஜான்சனின் மகள் , WWE போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

90-களின் காலக்கட்டத்தில் உலகளவில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது WWE  எனப்படும் பொழுதுப்போக்கு குத்துச்சண்டை போட்டிகள். அதில் வரும் வீரர்களில் மிக முக்கியமானவர் ட்வெய்ன் ஜான்சன். ‘தி ராக்’ என்று சொன்னால் அனைவருக்கும் எளிதில் தெரியும் ட்வெய்ன் ஜான்சன், ஹாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

image

இந்நிலையில் ட்வெய்ன் ஜான்சனின் மகளான சிமோன் ஜான்சன் குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து WWE   அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவரத்தை வெளியிட்டது. மேலும் தந்தையின் வழியில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பது பாரம்பரியத்தை பாதுகாப்பது போல தான்’ என சிமோன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted