3-வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் - `ஹிட் மேன்’ ரோஹித் சர்மா!

Oct 01, 2020 08:34 PM 873

13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருக்கும் மும்பை அணியின் கேப்டன், ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர விரர் சுரேஷ் ரெய்னாவை இந்த சாதனையை படைத்தார். 189 போட்டிகளில் களம்கண்ட சுரேஷ் ரெய்னா 5,368 ரன்கள் குவித்திருக்கிறார்.

முதலில் ரெய்னா இச்சாதனையை படைத்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கோலி 172 போட்டிகளில் 5,430 ரன்கள் எடுத்துள்ளார்.ரோகித் சர்மா 187வது போட்டியில் 5,000 ரன்களை கடந்திருக்கிறார்.

 

Comment

Successfully posted