தயவு செய்து அவரை விளையாட விடுங்கள்: ரோகித் சர்மா கோரிக்கை

Nov 09, 2019 05:03 PM 440

22 வயதான இளம் வீரர் ரிஷப் பந்த், வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது போட்டியில் களம் இறங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது, விக்கெட் கீப்பர் பணியின் போது, ரிஷப் பந்த் சொதப்பியதன் காரணமாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா, 2-வது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ரிஷப் பந்த் குறித்து பேச்சுகள் நடைபெற்று வருவது உங்களுக்கு தெரியும். களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ரிஷப் பந்த் ஒரு அச்சமற்ற வீரர். அவர் மீது வைத்துள்ள கண்களை சற்று தள்ளி வைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இது, அவரை சிறப்பாக செயல்பட உதவும் என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted