ரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு!

Jul 03, 2020 01:03 PM 313

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பிரபல ரவுடியை கைது செய்ய சென்ற போது, 8 போலீசாரை ரவுடிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கான்பூரில், விகாஸ் துபே என்ற ரவுடியைப் பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்றிருந்தனர். அப்போது, அவரது வீட்டின் மாடியில் இருந்து சில ரவுடிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில், துணை காவல் கண்காணிப்பாளர், 3 உதவி ஆய்வாளர் உட்பட 8 போலீசார் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், ஐஜி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comment

Successfully posted