தலைமறைவான பிரபல ரவுடி பினு சென்னையில் கைது

Jun 19, 2019 08:24 AM 175

சென்னையில் பிரபல ரவுடி பினு  மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கடந்த 2014ம் ஆண்டு ஜாமினில் வெளி வந்து பின்னர் தலைமறைவாகினார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட பினு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு அடுத்துள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் வெகு விமரிசையாகக் கூட்டாளிகளுடன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியபோது போலீசார் சுற்றி வளைத்து 72 பேரை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசாரிடம் பினு சரண் அடைந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த பின் தலைமறைவாகி கேரளாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், புழலில் உள்ள தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்த பினுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Comment

Successfully posted