பிரபல ரவுடி பினுவின் கூட்டாளி கைது

Nov 16, 2019 02:55 PM 159

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகளை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொழிலதிபர் ஒருவரிடம் 2012 ஆம் ஆண்டில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த வழக்கில் வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டு 14 மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நிலையில் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில், காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.

Comment

Successfully posted