ரவுடி துரைமுத்து வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த காட்சிகள்!

Aug 20, 2020 09:07 PM 1358

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்து வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்ற போது, அவர் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் காவலர் சுப்பிரமணியனும், ரவுடி துரைமுத்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெடி விபத்தில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் உடல், அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ரவுடி துரைமுத்து வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனிடையே ரவுடி துரைமுத்துவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான மங்கல குறிச்சி கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, அவரது உடல் மீது சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட வீச்சருவாள் வைத்து அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comment

Successfully posted