சென்னை புளியந்தோப்பில் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கும்பல்

Jun 13, 2019 08:55 AM 68

சென்னை புளியந்தோப்பில் கத்திய காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியந்தோப்பு கே.எம். கார்டனை சேர்ந்த நவீன்குமார் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு சிவராவ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று இடித்தது. இதில் நவீன்குமாருக்கும் காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென காரில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 10 ஆயிரத்தை பறித்துள்ளார்.

நவீன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகில் கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி சங்கிலி கணேஷ், சூர்யா, குமார், செந்தில் ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கார், இரண்டு கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் குடியாத்தத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted