கன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை!!

Aug 13, 2020 07:31 AM 376

சென்னை நங்கநல்லூரில், கன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிவி.நகரை சேர்ந்த பிரபாகரன், ராபின் ராஜா ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன் ராபின் ராஜாவை, பிரபாகரன் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராபின் ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து, பிரபாகரனை கடந்த 10ம் தேதி இரவு பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆகாஷ், பிரபு, ஆலிவின்ராஜா, பார்த்திபன், ராஜ்குமார், அருண் ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted