எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

Jun 07, 2021 04:37 PM 705

கோவை மாவட்டம் மசக்காளி பாளையத்தை அடுத்த முல்லை நகரில் மணிகண்டன் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது குடிபோதையில் அந்த பகுதி மக்களிடம் தகராறு செய்வதும், வாகனங்களை சேதப்படுத்துவதுமாக இருந்துள்ளார். எதிர் வீட்டில் இருந்தவர்கள் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். எதிர் வீட்டினர் பயந்துபோய் கேட்டை பூட்டிக்கொண்டு உள்ளே சென்றனர். மணிகண்டன் கையில் கத்தி மற்றும் கற்களை வைத்து மிரட்டிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ரவுடி மணிகண்டனின் அடாவடித்தனத்தை பார்த்து அந்த பகுதி மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ரவுடிகள், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைதூக்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

Comment

Successfully posted