காரில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ரூ.1000, ரூ.500 பழைய நோட்டுகள்

Dec 21, 2018 09:15 PM 392

தாராபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 1000, 500 பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஏரக்காம்பட்டி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டதில், காரில் இருந்த 2 இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தி, காரை சோதனையிட்டதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்தனர்.

Comment

Successfully posted