மானாமதுரை ஒன்றியத்தில் ரூ.1.17 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி!

Jun 18, 2020 04:59 PM 1214

சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், 39 ஊராட்சிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comment

Successfully posted