மதுரவாயலில் ATM எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

Mar 15, 2019 12:00 PM 363

மதுரவாயலில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 நைஜீரியர்கள் உட்பட 3 பேரை கைது செய்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மதுரவாயலில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், நைஜீரியரான அக்யோ மாயே என்பவரை முதலில் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மைசூரில் பதுங்கியிருந்த மற்றொரு நைஜீரியரான அமோவையும் சென்னையை சேர்ந்த க்ரேயா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏடிஎம் எந்திரத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.Comment

Successfully posted