நாடு முழுவதும் ரூ.1460 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல் -தேர்தல் ஆணையம்

Apr 02, 2019 06:18 AM 155

நாடு முழுவதும் ஆயிரத்து 460 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

நாடு முழுவதிம் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயிரத்து 460 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள், போதைப் பொருட்கள், தங்கம், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 108 கோடியே 75 லட்ச ரூபாயும் , 93 கோடியே 36 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 5 கோடியே 94 லட்சம் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் என 208 கோடியே 55 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 510 கோடியும் ஆந்திராவில் 158 கோடியும், பஞ்சாப்பில் 144 கோடியும் பிடிபட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் பிடிபட்ட இலவச பொருட்களின் மதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted