கொடைகானல் வாகன சோதனையில் ரூ.18 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

Mar 25, 2019 10:18 AM 129

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 18 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு பகுதியில், தேர்தல் உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, திருச்சியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்த தனபாலன் என்பவரது காரை மடக்கி சோதனையிட்டதில், 18 லட்ச ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted